உள்ளூர் செய்திகள்

ஸ்ரீநாராயணீயம்

அஜ்ஞாத்வாதே மஹத்வம் யதிஹநி கதிதம் விஷ்வநாத க்ஷமேதா:ஸ்தோத்ரஞ்சைதத் ஸஹஸ்ரோத் தரமதிகதரம் த்வத்ப்ரஸாதாய பூயாத்Iத்வேதா நாராயணீயம் ச்ருதிஷூ ச ஜனுஷாஸ் துத்யதா வர்ணனேனஸ்பீதம் லீலாவதாரைர் இதமிஹ குருதாம் ஆயுர் ஆரோக்கிய ஸௌக்யம் IIஇறுதி ஸ்லோகமான இதில் நாராயண பட்டத்ரி தன் பாடலில் ஏதேனும் பிழை இருந்தால் பொறுத்தருளுமாறு வேண்டுகிறார். வேதங்களில் கூறப்பட்டதைக் கொண்டு ஆரம்பித்து, இதிகாச, புராணங்களில் கூறப்பட்டதைக் கொண்டு வளர்ந்து நாராயணரைப் பற்றி நாராயணன் பாடியதால் இதற்கு 'நாராயணீயம்' எனப் பெயரிட்டதாக தெரிவிக்கிறார். நாராயணீயத்தை படிப்பவர்கள் நீண்ட ஆயுள், உடல்நலம், சுகம் பெற்று வாழ்வர் என பாடலை நிறைவு செய்கிறார்.- எல்.ராதிகா, திருச்சிradhu_g16@yahoo.co.in