உள்ளூர் செய்திகள்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

* பக்தனுக்கு விரைந்து அருள்புரிவதால் சிவபெருமானுக்கு 'ஆசுதோஷி' என்று பெயர். * பூமாதேவியின் அம்சமாக ஸ்ரீவில்லிபுத்துாரில் அவதரித்த ஆழ்வார் ஆண்டாள்.* தன்னை தாயாக கருதி கண்ணன் மீது தாலாட்டு பாடியவர் பெரியாழ்வார்.* பட்டாபிஷேகத்தின் போது அனுமனுக்கு முத்துமாலையைப் பரிசாக கொடுத்தவர் ராமர்.* விவேகானந்தருக்கு பிரியமான உபநிடதம் கடோபநிஷத். இதில் எமனுடன் வாதிட்ட நசிகேதஸ் என்னும் சிறுவனின் வரலாறு கூறப்பட்டுள்ளது. * சிவபெருமானின் கையிலுள்ள வில் பினாகம். இதனால் அவருக்கு பினாகபாணி என்றும் பெயருண்டு.* காமதேனுவின் மகளான பட்டி வழிபட்ட சிவத்தலம் பட்டீஸ்வரம் (கும்பகோணத்தில் இருந்து 8 கி.மீ.,)* திருப்பதி மலையில் ஏழுமலையானுக்கு இடம் அளித்தவர் வராகப் பெருமாள். அங்குள்ள புஷ்கரணி குளக்கரையில் இவர் கோயில் கொண்டிருக்கிறார். * அஷ்ட பிரபந்தம் என்னும் எட்டு நுால்களைப் பாடியவர் பிள்ளைப்பெருமாள் அய்யங்கார்.