சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்
* வடகிழக்கு (ஈசானம்), தென்மேற்கு(கன்னி) மூலைகள் வழிபாட்டிற்கு உரியவை. * அகோபிலம் நரசிம்மர் மீது ஸ்ரீராமர் பாடியது பஞ்சாமிர்த ஸ்தோத்திரம்* அமாவாசையும், திங்கட்கிழமையும் இணைந்த நாள் 'அமாசோமவாரம்' எனப்படும். இந்த நாளில் அரசமரத்தை சுற்றி வர பாவம் தீரும். * பன்னிரு திருமுறைகளில் பத்தாம் திருமுறையில், திருமூலர் பாடிய திருமந்திரம் இடம் பெற்றுள்ளது. * கோபுர கலசத்தில் நிரப்பப்படும் தானியம் வரகு.* சிவபெருமானின் அடியவர்களான நாயன்மார்களின் எண்ணிக்கை 63. இவர்களின் வரலாற்றைக் கூறும் நுால் பெரியபுராணம். * விநாயகரால் கொல்லப்பட்ட யானை முக அசுரனின் பெயர் 'கஜமுகாசுரன்' * காதலாகி கசிந்து சிவபெருமானிடம் கண்ணீர் மல்கிய குழந்தை திருஞானசம்பந்தர்* மகாவிஷ்ணுவை வழிபட்டு பவுர்ணமியன்று மேற்கொள்ளும் விரதம் சத்திய நாராயண விரதம்.* மகாவிஷ்ணுவின் கையிலுள்ள சங்கு பாஞ்சஜன்யம். சக்கரம் சுதர்சனம்.