சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்
* வைஷ்ணம் என்பதற்கு 'விஷ்ணு சம்பந்தமானது' என்பது பொருள். * விஷ்ணு என்பதன் பொருள் 'எங்கும் நிறைந்திருப்பவர்'* 'விஷ்ணு சூக்தம்' என்னும் மந்திரம் சாம வேதத்தில் இடம் பெற்றுள்ளது. * மகாவிஷ்ணுவின் அவதாரங்களை விவரிக்கும் நுால் பாகவத புராணம்* திருப்பதி ஏழுமலையில் மீனாக பிறக்க ஆசைப்பட்டவர் குலசேகராழ்வார்* பூலோகத்தில் தரிசிக்க முடியாத இரு திவ்ய தேசங்கள் பரமபதம், பாற்கடல்* பக்தவத்சலப் பெருமாள் என்பதற்கு 'தாயன்புடன் நம்மை காப்பவர்' என்பது பொருள். * திருப்பதி வெங்கடாஜபதி பூலோகத்தில் அவதரித்த நாள் புரட்டாசி திருவோணம் * திவ்யதேசங்களில் பெருமாள் நின்ற கோலத்தில் அருளும் தலங்கள் 67 * ஆலிலையில் கிருஷ்ணர் துாங்குவதை பத்ர சயனம் என்று குறிப்பிடுவர்* நைமிசாரண்யம் என்னும் திவ்யதேசத்தில் மகாவிஷ்ணு வனமாக(காடாக) இருப்பதாக ஐதீகம்.* மகாவிஷ்ணுவின் கையிலுள்ள சங்கின் பெயர் பாஞ்சஜன்யம். * கண்ணன் என் காதலன் என கவிதை பாடியவர் தேசியக்கவி பாரதியார்.