உள்ளூர் செய்திகள்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

* சந்நியாசி, மருத்துவர், ஜோதிடர், குரு, கர்ப்பிணி, நோயாளி ஆகியோருக்கு ஆபத்துக் காலத்தில் செய்யும் உதவியால் வரும் புண்ணியம் உயர்ந்தது. * குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடப்பதற்கு முன்பும், நடந்த பின்பும் குலதெய்வத்திற்கு பூஜை செய்ய வேண்டும். அதே சமயம் இஷ்ட தெய்வத்தை மறந்து விடக்கூடாது. * ஒருவருக்கு பக்தி மட்டும் இருந்தால் போதாது. ஒழுக்கமும் வேண்டும்.* பாவத்தினால் ஏற்பட்ட கஷ்டம், புண்ணியத்தால் ஏற்பட்ட மகிழ்ச்சியினால் அடிபட்டுப்போகிறது. * உங்களது திட்டங்கள் வெற்றி பெற்றால், கடவுள் உங்களுக்கு அனுமதி அளித்து விட்டார் என்று பொருள். * ஒருவரை எந்த வார்த்தை சொல்லி திட்டுகிறீர்களோ, அதே வார்த்தையால் எப்போதாவது நீங்கள் திட்டப்படுவீர்கள்.* எல்லோரும் பந்தியில் சாப்பிட்டுக் கொண்டு இருக்கும்போது, தான் மட்டும் முதலில் எழுந்து செல்லுதல் கூடாது. * ஐம்பது வயதுக்கு மேல் இரவில் பால், பழம் மட்டும் சாப்பிட்டு வந்தால் ஆயுள் விருத்தி அடையும். * நேர்மையுடன் நல்ல வழியிலே உழைப்பதால் உண்டாகும் முன்னேற்றம், ஆலமரத்தைப் போல வளர்ந்து பயன் தரும்.