சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்
* 'கர்மாவே பெரிது, கடவுள் இல்லை' என்று கூறினர் சில முனிவர்கள். அவர்களது ஆணவத்தை அழிக்க நினைத்தார் சிவபெருமான். தனக்கு எதிராக ஏவப்பட்ட யானையை தன் ஆடையாக்கி, உடுக்கு, தீ, பாம்பு முதலியவற்றை ஆபரணமாகக் கொண்டு நடராஜராக காட்சி தந்தார். இதுதான் மார்கழித் திருவாதிரை. * 'திரு' என்ற அடைமொழியோடு வருவன ஆதிரை, ஓணம் நட்சத்திரங்கள். இவற்றுள் திருவோணம் பெருமாளுக்கும், திருவாதிரை நடராஜருக்கும் உரியது. * நடராஜருக்கு வருடத்தில் ஆறு முறை சிறப்பு அபிேஷகம் நடக்கும்.1. சித்திரை திருவோணம்2. ஆனி உத்திரம்3. மார்கழி திருவாதிரை, 4. ஆவணி வளர்பிறை சதுர்த்தசி5. புரட்டாசி வளர்பிறை சதுர்த்தசி6. மாசி வளர்பிறை சதுர்த்தசி * ஆருத்ரா தரிசனம் அன்று களி, கூட்டு செய்து நடராஜருக்கு நைவேத்தியம் செய்யலாம். * திருவாதிரை விரதம் இருப்பவர்கள் மார்கழி திருவாதிரையில் விரதத்தை தொடங்க வேண்டும். இப்படி ஒவ்வொரு திருவாதிரையன்று விரதம் இருந்து, ஒரு வருட காலத்தில் பூர்த்தி செய்யலாம்.* பிரபஞ்ச இயக்கத்துக்குக் காரணமான சிவபெருமானின் ஐந்தொழில்களையும் வெளிப்படுத்தும் கோலம் நடராஜ திருவடிவம்.* ஆருத்ரா நாளில் தொடங்கப்படும் எந்த முயற்சியும் சிக்கலின்றி நிறைவேறும். இந்நாளில் சேரும் செல்வம் மேலும் மேலும் பெருகும்.