உள்ளூர் செய்திகள்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

* வைணவத்தின் முதன்மைத் தெய்வமாகிய பெருமாளை போற்றித் தமிழ்ச் செய்யுட்களால் பாடியவர்கள் ஆழ்வார்கள். இவர்களது பாடல்கள் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம். * பன்னிரு ஆழ்வார்களில் ஒருவர் திருமழிசையாழ்வார். இவர் தை மாதம் மகம் நட்சத்திரத்தில், திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை என்னும் ஊரில் அவதரித்தார். * இவர் பெருமாளின் ஆயுதங்களுள் ஒன்றான சக்கரத்தின் அம்சமாகத் தோன்றியவர். * நான்முகன் திருவந்தாதி, திருச்சந்த விருத்தம் முதலிய பிரபந்தங்களை அருளியுள்ளார். * பக்திசாரர், உறையில் இடாதவர், குடமூக்கிற் பகவர், திருமழிசையார், திருமழிசைபிரான் என இவருக்கு பல பெயர் உண்டு. * உறையில் இடாதவர் என்றால் வாளினை உறையில் இடாத வீரன் என பொருள். இவருடைய நாக்கு வாள் எனப்படும். * பார்க்கவ மகரிஷிக்கும் கனகாங்கி அம்மையாருக்கும் பிறந்த இவர், பெருமாள் மீது மிகுந்த அன்பு கொண்டவர். * இவர் பெருமாள் மீது வைத்திருக்கும் பக்தியைக் கண்டு, சிவபெருமான் இவருக்கு 'பக்திசாரர்' என்ற பட்டத்தை வழங்கினார்.