சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்
                              UPDATED : ஆக 04, 2023 | ADDED : ஆக 04, 2023 
                            
                          
* நல்ல விஷயம் பேசும்போது எண்ணெய், எள் குறித்து பேசாதீர்கள்.* வெற்றிகரமாக முடிப்போம் என்ற நம்பிக்கை இருந்தால் அதில் ஈடுபடுங்கள். * ராமாயணத்தில் உள்ள சுந்தரகாண்டத்தை படித்தால் விருப்பம் நிறைவேறும். * நல்ல மனதோடு கங்கையில் நீராடினால் ஏழு பிறவிகளில் செய்த பாவம் நீங்கும். * உச்சி முதல் உள்ளங்கால் வரை குளிப்பதே குளியல். நோயாளி, வயதானவர்களுக்கு இது பொருந்தாது. இதுவும் முடியாதவர்கள் தண்ணீரில் நனைத்த துணியைக் கொண்டு தலை, உடம்பைத் துடைக்கலாம். காஞ்சி மஹாபெரியவர் கடைசி சில நாட்கள் ஈரத்துணியைக் கொண்டு உடலை துடைத்து, மாலை நேர அனுஷ்டானம் செய்துள்ளார்.* கூட்டுக்குடும்பமாக வாழ்ந்தால் நல்லது. காரணம் ஒருவருக்கு ஜாதகத்தில் தோஷம் இருந்தால், மற்றொருவரின் ஜாதக பலத்தால் அந்த தோஷம் விலகும்.