உள்ளூர் செய்திகள்

திருவாசகம் பாடல் 203 - மாணிக்க வாசகர் பாடுகிறார்

நானும் என் சிந்தையும் நாயகனுக்கு எவ்விடத்தோம்?தானும்தன் தையலும் தாழ்சடையோன் ஆண்டிலனேல்வானும் திசைகளும் மாகடலும் ஆயபிரான்தேனுந்து சேவடிக்கே சென்றூதாய் கோத்தும்பீ!பொருள்: வண்டே! மங்கையை இடப்பாகமாகக் கொண்ட ஈசன் என்னை ஆட்கொள்ளாவிட்டால், நானும் என் மனமும் எக்கதி ஆகி இருப்போமோ? வானம், நான்கு திசைகள், பெரிய கடல் என்று இப்பிரபஞ்சம் அனைத்தும் வீற்றிருக்கும் இறைவனின் மலர்பாதத்தின் அருகே சென்று அவனது புகழ் பாடி ரீங்காரமிடுவாயாக.