திருவாசகம் - மாணிக்கவாசகர் பாடியது
UPDATED : நவ 13, 2013 | ADDED : நவ 13, 2013
உடையானே நின்றனை உள்கிஉள்ளம் உருகும் பெருங்காதல்உடையார் உடையாய்! நின்பாதம் சேரக் கண்டிங்கு ஊர்நாயின் கடையானேன் நெஞ்சுருகாதேன் கல்லா மனத்தேன் கசியாதேன்முடையார் புழுக்கூடு இதுகாத்திங்கு இருப்பதாக முடித்தாயே.பொருள்: எல்லா உயிர்களையும் அடிமையாகக் கொண்ட சிவபெருமானே! உன்னை நினைத்து உள்ளம் உருகி, பெரும் அன்பு கொண்டவர்கள், உன் திருவடிகளை அடைகின்றனர். அதைக் கண்கூடாகக் கண்டும் கூட, நாயினும் கீழோனாகிய எனது மனம் உருகவில்லை. அறியாமையில் இருக்கும் என்மனம் கசிந்து உன்னை வணங்கவில்லை. நாற்றம் கொண்ட புழுக்களின் இருப்பிடமான இந்த உடலைப் பேணுவதில், நாட்டம் கொண்டவனாகவே இன்னும் இருக்கிறேன்.