உள்ளூர் செய்திகள்

மகாலட்சுமியின் அருளை பெற...

மகாலட்சுமியின் அருளை பெற என்ன செய்ய வேண்டும்... * பணத்தினை எச்சில் தொட்டும், சில்லறைகளை ஒலி எழுப்பியவாறும் எண்ணக்கூடாது. * பணத்தினை தலைகீழாக மாற்றி மாற்றி அடுக்கக்கூடாது. * சட்டையின் மேல் பையில் பணத்தை வைத்துக்கொள்வது நல்லது.* வீட்டில் பீரோ,அலமாரி போன்றவை ஈசான திக்காகிய வடகிழக்கு மூலையை பார்த்து இருந்தால் நல்லது.* வேறு யாருக்கும் தெரியக்கூடாது என்பதற்காக பணத்தை ஒவ்வொரு முறையும் கண்ட இடத்தில் இடம் மாற்றி வைக்கக்கூடாது. * வியாழன், வெள்ளியில் பரணி, பூரம், பூராடம், பூனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரம் வரும் நாட்களில் பணத்தை சேமித்து வைத்தால் பணம் பெருகும். * வியாழன், வெள்ளியில் குருஓரை, சுக்கிரஓரை நேரத்தில் பணத்தை எடுத்து சேமிக்க தொடங்கினால் சேமிப்பு அதிகரிக்கும்.* வியாழன் தோறும் காலை 6:00 - 7:00, மதியம் 1:00 - 2:00 , இரவு 8:00 - 9:00 அருகில் இருக்கும் மகான்களின் கோயிலுக்கு சென்று வரலாம்.* திருஞானசம்பந்த நாயனார் தந்த திருவாவடுதுறை பதிகத்தை தொடர்ந்து நாற்பத்து எட்டு நாட்கள் படித்து வர பணத்தேவை பூர்த்தியாகும். * கோயில்களில் யாகசாலையில் போடப்பட்டவை, சுவாமியின் காலடியில் வைத்து தரப்படும் நாணயங்களை பீரோவில் மஞ்சள் துணியில் முடிந்து வையுங்கள். நல்ல மாற்றம் உண்டாகும்.