உள்ளூர் செய்திகள்

இந்த வாரம் என்ன

அக்.14, புரட்டாசி 27: திருநெல்வேலி, சங்கரன் கோயில், தென்காசி, துாத்துக்குடி, பத்தமடை, ஸ்ரீவில்லிபுத்துார், கோவில்பட்டி ஆகிய தலங்களில் அம்பாள் வீதியுலா. நந்தனார் குருபூஜை.அக்.15, புரட்டாசி 28: பெருமாள் கோயில்களில் புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு. ஸ்ரீவில்லிபுத்துார் திருவண்ணாமலை சீனிவாசப்பெருமாள் கருட வாகனம்.அக்.16, புரட்டாசி 29: வீரவநல்லுார், துாத்துக்குடி, சங்கரன்கோயில், திருநெல்வேலி கோயில்களில் அம்பாள் புறப்பாடு.பெரும்புதுார் மணவாள மாமுனிகள் புறப்பாடு. உடையவர் கூட திருப்பதி ஏழுமலையப்பன் புறப்பாடு.அக்.17, புரட்டாசி 30: கோமதியம்பாள் புஷ்ப பாவாடை தரிசனம். சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப்பெருமாள் திருமஞ்சனம். அக்.18, ஐப்பசி 1: உத்திரமாயூரம் வள்ளலார் சன்னதியில் சந்திரசேகரர். திருமெய்யம்சத்திய மூர்த்தி புறப்பாடு. தேவகோட்டை மணிமுத்தாநதி, திருநெல்வேலி தாமிரபரணி நதிக்கரை சிவன் கோயில்களில் தீர்த்தவாரி.அக்.19, ஐப்பசி 2: துாத்துக்குடி, கோவில்பட்டி, தென்காசி, வீரவநல்லுார், ஆகிய தலங்களில் அம்பாள் பவனி. சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப்பெருமாள் கோயிலில் நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சனம். அக்.20, ஐப்பசி 3: சுவாமிமலை முருகன் தங்ககவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருப்பதி திருவேங்கடமுடையான் புஷ்பாங்கி சேவை. திருநெல்வேலி காந்திமதியம்மன் தேர்.