இந்த வாரம் என்ன
பிப்.10 தை 27: முகூர்த்த நாள், கூரத்தாழ்வார் திருநட்சத்திரம். ராமேஸ்வரம் பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபத்திற்கு எழுந்தருளல். சங்கரன் கோயில் கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம்.பிப்.11 தை 28: ராமநாதபுரம் செட்டிதெரு முத்தாலம்மன் கோயில் உற்ஸவம் ஆரம்பம். அஹோபில மடம் ஸ்ரீமத் 15 வது பட்டம் அழகிய சிங்கர் திருநட்சத்திரம். குச்சனுார் சனிபகவான் சிறப்பு அபிஷேகம்.பிப்.12 தை 29: முகூர்த்த நாள், ஸ்ரீவில்லிபுத்துார் பெரியாழ்வார் புறப்பாடு. கீழ்த்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னதிக்கு எதிரே உள்ள அனுமனுக்கு திருமஞ்சனம். சூரிய வழிபாடு செய்தல் நன்று. பிப்.13 மாசி 1: விஷ்ணு பதி புண்ணிய காலம். திருக்கோகர்ணம், காளஹஸ்தி, ஸ்ரீசைலம், திருவைகாவூர் தலங்களில் உற்ஸவம் ஆரம்பம். ஆழ்வார்திருநகரி நம்மாழ்வார், திருப்பரங்குன்றம் முருகன், திருவள்ளூர் வீரராகவப்பெருமாள் புறப்பாடு.பிப்.14 மாசி 2: கோயம்புத்துார் கோணியம்மன் பூச்சாற்று விழா. நத்தம் மாரியம்மன் பவனி, சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிகோயிலில் ஆண்டாள் மூலவருக்கு திருமஞ்சனம். பிப்.15 மாசி 3: ஸ்ரீரங்கம் நம்பெருமாள் பவனி. ராமேஸ்வரம் சுவாமி,அம்பாள் வெள்ளி யானை வாகனத்தில் பவனி. பிப்.16 மாசி 4: முகூர்த்த நாள், ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள், ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல். ஸ்ரீபெரும்புதுார் மணவாள மாமுனிகள் புறப்பாடு. வேதாரண்யம் சிவபெருமான் உற்ஸவம் ஆரம்பம்.