தொட்டது துலங்க...
எதைச் செய்ய முயன்றாலும் சிலருக்கு தடங்கல் உண்டாகும். அப்படி செய்து முடித்தாலும் அதை அனுபவிக்கும் பாக்கியம் கிடைக்காது. இந்நிலை ஏற்படக் காரணம் முற்பிறவியில் செய்த பாவமே. முற்பிறவியில் நல்வினை அதிகம் இருந்தால் இப்பிறவியில் வெற்றி கிடைக்கும். அதுவே எதிர்மறையாக அமைந்து இருந்து விட்டால் செயலில் தடங்கல் குறுக்கிடும். இதை பரிகாரத்தால் சரி செய்யலாம். ராமாயணத்தை 'ராமசரித மானஸ்' என்னும் பெயரில் ஹிந்தியில் எழுதினார் துளசிதாசர். அதில் பாலகாண்டத்தில் வரும் ஸ்லோகத்தை தினமும் மூன்று முறை சொன்னால் போதும். 'பந்தௌ நாம ராம் ரகுபர் கோஹேது க்ருஸானு பானு ஹிமகர் கோபிதி ஹரி ஹர்மய பேத் ப்ரான் ஸோஅகுண அனுாபம் குண நிதான் ஸோஇதைச் சொல்ல முடியாவிட்டால் பொருளைச் சொல்லலாம்.''ரகுநாதா! உன் நாமத்தை வணங்குகிறேன். அக்னி, சூரியன், சந்திரன் எல்லாம் உன் நாமத்தில் அடங்கியுள்ளன. பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்தியின் அம்சங்களும் ராமநாமத்தில் இருக்கின்றன. வேதத்தின் உயிர் நாடியாகவும், நிர்குணமானவனும், நற்குணங்களின் இருப்பிடமாகவும் இருக்கும் ராம நாமத்தை போற்றுகிறேன்”. தொடர்ந்து ஜபித்தால் முன்வினைப்பாவம் நீங்கும். தொட்டது துலங்கும்.