தீயில் வந்தவள்
UPDATED : ஆக 22, 2024 | ADDED : ஆக 22, 2024
மகாபாரதத்தில் 'கிருஷ்ணா' என்றொரு பெண் இருந்தாள் தெரியுமா? அவள் தான் துருபதனின் மகளான திரவுபதி. கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றாத துருபதனை, தன் சீடர்களான பாண்டவர்கள் மூலம் துரோணாச்சாரியார் தோற்கடித்தார். தனக்கு ஏற்பட்ட அவமானத்தைப் போக்கும் விதத்தில் துருபதன் யாகம் ஒன்றை நடத்தினான். துரோணரைக் கொல்லும் வலிமை கொண்ட ஆண்மகன் தனக்கு மகனாக பிறக்க வேண்டும் என வழிபட்டான். யாக குண்டத்தில் இருந்து ஆண் குழந்தை வந்தது. அவனே 'திருஷ்டத்யும்னன்' என பெயர் பெற்றான். பாரதப் போரில் துரோணாச்சாரியாரைக் கொன்றவன் இவனே. அதே யாக குண்டத்தில் இருந்து பெண் குழந்தை ஒன்றும் வந்தது. 'கிருஷ்ணா' (கரியவள்) எனப் பெயரிட்டு வளர்த்தான். துருபதனின் மகளான அப்பெண்ணே 'திரவுபதி' எனப் பெயர் பெற்றாள்.