பகவத்கீதையும் திருக்குறளும் - 25
தியானம் செய்தால்...கந்தன் தியானப் பயிற்சியில் ஈடுபட்ட போது, ''ஏன் தாத்தா? தியானம் பற்றி பகவான் கிருஷ்ணரும், திருவள்ளுவரும் என்ன சொல்லி இருக்காங்க''எனக் கேட்டான். பகவான் கிருஷ்ணர் பகவத்கீதையின் 6ம் அத்தியாயத்தில் உள்ள ஸ்லோகத்தில் தத்ர தம் பு ³த்³தி 4ஸம்யோக³ம் லப4தே பௌர்வதே³ஹிகம்|யததே ச ததோ பூ4ய: ஸம்ஸித்³தௌ 4 குருநந்த³ந ||6-43||ஒரு மனிதனுக்கு முற்பிறவியில் இருந்த புத்தியே இந்த பிறவியிலும் தொடரும். தியானப் பயிற்சியில் இப்போது முதன்முதலாக ஈடுபட்டால் அடுத்தடுத்த பிறவியில் அது முழுமை பெறும். இதை திருவள்ளுவரும் தவம் என்னும் அதிகாரத்தில் 262 வது குறளில் தவமும் தவமுடையார்க்கு ஆகும் அதனைஅஃதிலார் மேற்கொள் வதுதவ வாழ்வில் ஈடுபடும் ஆற்றலும், மனஉறுதியும் உள்ளவருக்கு மட்டுமே தவஆற்றல் பெருகும். மற்றவர்கள் அதில் ஈடுபடுவது வீண் செயலாகும் என்கிறார்.அதாவது முற்பிறவியில் ஒருவன் தியானம், தவப் பயிற்சியில் ஈடுபட்டு இருந்தால் இந்த பிறவியில் நிச்சயம் வெற்றி பெறும். இந்த பிறவியில் முதன் முதலாக தியானம் செய்ய பழகினால் அடுத்து வரும் பிறவிகளில் அதற்கான வாய்ப்பு கிடைக்கப் பெற்று முன்னேறுவர்'' என்றார் தாத்தா.கந்தனும் மனநிறைவுடன் வீட்டுக்கு புறப்பட்டான். -தொடரும்எல்.ராதிகா97894 50554