குழந்தையை திட்டாதே
சூரிய பகவானின் நைவேத்யம் என்ன?அவருக்கு பிடித்தது வழுக்கைத் தேங்காய், உளுந்து வடை, பொங்கல், வாழைப்பழம் 'என்னது... வழுக்கைத் தேங்காயா... பூஜைக்கு தேங்காய் உடைத்தாலே அது முற்றின காயாகத் தானே இருக்கும். இல்லாவிட்டால் அது தவறு தானே...அதற்கான காரணத்தை விளக்குகிறார் காஞ்சி மஹாபெரியவர்.'பார்வதியின் தந்தை தட்சன். அவர் தன் மருமகனான சிவபெருமானை அழைக்காமல் யாகம் நடத்தினார். இதில் சூரியன் உள்ளிட்ட தேவர்கள் பங்கேற்றனர். இதை அறிந்த பார்வதி யாகத்தை தடுக்க புறப்பட்டாள். 'அப்பா... நீங்கள் செய்வது நியாயமா? என் கணவரை அழைக்காமல் யாகம் நடத்தலாமா?' எனச் சண்டையிட்டாள். ஆனால் தட்சனோ மகள், மருமகனை அலட்சியப்படுத்தினான். இதைக் கேட்டதும் சூரியன் கலகல என சிரித்தார். இதையறிந்த சிவனுக்கு கோபம் வந்தது. தன் அம்சமான வீரபத்திரரை அனுப்பி வைத்தார். அவரோ யாகத்தில் பங்கேற்றவர்களை தண்டித்தார். 'நீ தானே பல் தெரிய கேலியாகச் சிரித்தவன்?' என சூரியனை பார்த்து வீரபத்திரர் கேட்டார். அதோடு நில்லாமல் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டார். பற்கள் தெறித்து விழுந்தன. பல் இல்லாத சூரியனுக்காக பொங்கல், ரத சப்தமி நாளில் அப்படியே விழுங்கும் விதத்தில் வழுக்கைத் தேங்காய், உளுந்து வடை, பொங்கல், வாழைப்பழம் நைவேத்யம் செய்கிறோம்.சிவனின் மாமனாரான தட்சன் தன் மருமகனை அவமரியாதை செய்ததால் தானே இது நடந்தது. இதை மனதில் வைத்து மடத்திற்கு வரும் பக்தர்களிடம், குழந்தைகளை அடிக்கவோ, திட்டவோ கூடாது என அறிவுறுத்தி ஆசியளிப்பார் காஞ்சி மஹாபெரியவர். காஞ்சி மஹாபெரியவரின் உபதேசம்* ஒருமுறையாவது காசி, ராமேஸ்வரம் செல்.* புண்ணிய தீர்த்தத்தை சுத்தமாக வைத்திரு. * சனிக்கிழமையன்று நல்லெண்ணெய் தீபம் ஏற்ற ஆயுள் கூடும். * முடிந்தவரை கை, கால்களை கழுவிய பின் கோயிலுக்குள் நுழையுங்கள். உடல்நலம் பெற... காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்அஸ்மிந் பராத்மன் நநு பாத்மகல்பேத்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!அநந்த பூமா மமரோக ராஸிம்நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!--நாராயணீயம்எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப் போக்கி நலம் தர வேண்டும்.பி.சுவாமிநாதன்swami1964@gmail.com