உள்ளூர் செய்திகள்

நல்லாட்சி மலர...

குரு முதல்வர் என போற்றப்படும் நமச்சிவாய மூர்த்திகள் மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள மூவலுாரில் பிறந்தார். இவரது இயற்பெயர் வைத்தியநாதன். இவரின் ஆன்மிக ஈடுபாட்டை அறிந்து குருநாதரான சிவப்பிரகாசர் உபதேசம் செய்து 'நமசிவாயம்' என பெயர் சூட்டினார். இவரின் வழியில் வந்த சீடர்களால் திருவாவடுதுறை ஆதினம் செயல்படுகிறது.இந்த ஆதினத்தைச் சேர்ந்த தம்பிரான் சுவாமிகளே, இந்திய சுதந்திரத்தின் போது செங்கோல் கொடுத்து கோளறு பதிகம் பாடினார்.அதே போல தற்போதுள்ள ஆதினத்தலைவர் உட்பட தமிழக சைவ மடங்களின் துறவிகள் இணைந்து புதிய பாராளுமன்றத்தில் செங்கோலை பிரதமர் நரேந்திர மோடி மூலம் நிறுவியது குறிப்பிடத்தக்கது. இந்த ஆதினத்தின் அருகில் மாசிலாமணியீசர் சிவன் கோயில் உள்ளது. இங்குள்ள அம்மன் ஒப்பிலா வல்லி, தலவிருட்சம் அரசமரம். இக்கோயிலில் ஒரே இடத்தில் மூன்று சூரியன்கள் உள்ளனர். போகர் முதலான நவகோடி சித்தர்களுக்கு மாசிலாமணியீசரே உபதேசம் செய்தார் என்பதால் இங்கு வழிபடுவோருக்கு நினைத்தது நடக்கும். தாலி பாக்கியம், தம்பதி ஒற்றுமை, குழந்தைப் பேறு உண்டாக விளக்கேற்றுகின்றனர். இங்கு தை மாதம் அசுவினி நட்சத்திரத்தன்று (பிப்.4, 2025) நமச்சிவாய மூர்த்திகள் குருபூஜை நடக்கிறது.