உள்ளூர் செய்திகள்

பூக்களை பறிக்காதீர்

ஒருமுறை பக்தை பூக்கூடையுடன் திருவண்ணாமலை ரமணர் ஆஸ்ரமத்திற்கு வந்தார். பூக்களின் நறுமணம் காற்றில் பரவியதால் அங்கிருந்த அனைவரும் மகிழ்ந்தனர். பெருமையுடன் நின்றிருந்த அவரிடம், 'பூக்களை எங்கு பறித்தாய்' எனக் கேட்டார் ரமணர். 'ஆஸ்ரமத்திற்கு வரும் வழியில் உள்ள பூச்செடிகளில் பறித்தேன்' என்றார். 'செடியில் பூக்கள் எப்படி காட்சியளித்தன' எனக் கேட்டார். அவர், 'கொள்ளை அழகு' என்றார். 'நீ மட்டும் பூக்களை பார்த்து மகிழ்ந்தாயே... உன்னைப் போல மற்றவரும் மகிழ வேண்டாமா... செடியில் உள்ள பூக்களை பார்ப்பதற்கு எனக்கு பிடிக்கும். செடியில் பூவே இல்லாமல் அத்தனையும் இப்படி பறிப்பது கூடாது'' என்றார் ரமணர். இந்த உபதேசத்திற்கு பின் பூக்களை ரசிப்பதோடு சரி. பறிப்பதில்லை என்ற முடிவுக்கு வந்தார் அந்த பெண். - --லட்சுமி பாலசுப்ரமணியன்