திருப்பல்லாண்டு பாடியவர்
UPDATED : ஜூலை 25, 2025 | ADDED : ஜூலை 25, 2025
பாண்டிய மன்னரின் முன்னிலையில் நடந்த பரதத்துவ நிர்ணய போட்டியில் (கடவுள் யார்) மகாவிஷ்ணுவே பரம்பொருள் என நிரூபித்து பொற்கிழி பெற்றார். கருட வாகனத்தில் காட்சியளித்து பரிசு கிடைக்கச் செய்தார் மகாவிஷ்ணு. அங்கு கூடியிருந்தவர்கள் மகாவிஷ்ணுவை தரிசித்தனர். மக்களின் கண் பட்டதால் ஆபத்து நேருமோ என பெரியாழ்வார் வருந்தி 'திருப்பல்லாண்டு' பாடினார். இந்த உயர்ந்த பக்தியை மெச்சி, 'நீரே பக்தியில் பெரியவர்' என வாழ்த்தினார். அது வரையில் 'விட்டுசித்தன்' (விஷ்ணு சித்தர்) எனப்பட்ட இவர், 'பெரியாழ்வார்' என பெயர் பெற்றார். இந்தப் பல்லாண்டுப் பாடலே உலகம் முழுவதும் உள்ள திருமால் கோயில்களில் தினமும் காலையில் பாடப்படுகிறது.