ஓடி வந்த கரடி
UPDATED : ஆக 28, 2025 | ADDED : ஆக 28, 2025
'ஜாம்பவான்' என்னும் கரடி வேந்தன் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். இவர் வாமனராக வந்த மகாவிஷ்ணு திருவடியால் உலகளந்த காட்சியைக் கண்டதும் ஓடி வந்தார். தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதத்தில் பறை ஒன்றை கொட்டியபடி சுற்றி வந்து வணங்கினார். ஆண்டாளும் வாமனரைப் பாராட்டி திருப்பாவையில் மூன்று பாசுரம் பாடியிருக்கிறாள். மற்ற அவதாரங்களில் மகாவிஷ்ணு அசுரர்களை கொல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். ஆனால் மகாபலி அசுரனாக இருந்தாலும் அவனைக் கொல்லவில்லை. மாறாக சிரஞ்சீவியாக வாழும் பாக்கியத்தை கொடுத்தார். இதனால் 'ஓங்கி உலகளந்த உத்தமன்' என்று பாராட்டுகிறாள் ஆண்டாள்.