உள்ளூர் செய்திகள்

விநாயகப்பெருமானின் வித்தியாச வடிவங்கள் - 27

வறுமையை விரட்டும் த்விமுக கணபதித்வி என்றால் இரண்டு. இரண்டு முகங்கள் இவருக்கு உண்டு. அவை, வேதம், ஆகமம் இரண்டையும் உணர்த்துகின்றன. ஆகமம் - பரஞானம்; வேதம் - அபரஞானம். படிமவியலில், ஞானம் அல்லது அறிவு என்பது முகங்களாலும், திசைகள் கைகளாலும் உணர்த்தப்படுகின்றன. அவ்வகையில், இந்த கணபதி, இருவகை ஞானங்களின் குறியீடாகத் திகழ்கிறார். மேலும், புக்தி, முக்தி ஆகிய இம்மை, மறுமைப் பயன்களையும் இவ்விரு முகங்கள் குறிக்கின்றன. இவரைத் தவிர அக்னி தேவனுக்கு மட்டுமே இரு முகங்கள் உண்டு. அந்த வகையில் இவர் தனிச் சிறப்புடன் திகழ்கிறார்.தியான சுலோகம்ஸ்வதந்த பாசாங்குச ரத்ன பாத்ரம் கரைர் ததாநோ ஹரிநீல காத்ர: |ரக்தாம்சுகோ ரத்ன கிரீட மாலீ பூத்யை ஸதா மே த்விமுகோ கணேச: ||ஸ்வதந்த - தனது ஒடித்த தந்தம்பாசாங்குச - பாசம், அங்குசம் எனும் இரு ஆயுதங்கள்ரத்ன பாத்ரம் - ரத்தினங்கள் நிறைந்த பாத்திரம்ததாநோ - (ஆகியவற்றைத் தம் நாற்கரங்களில்) தாங்கியிருப்பவரும்ஹரிநீல காத்ர: - நீலநிறத் திருமேனியரும்ரக்த அம்சுக: - செம்பட்டாடையை அணிந்திருப்பவரும்ரத்னகிரீட மாலீ - நவரத்தினங்களால் ஆன மணிமுடி மற்றும் மாலையை அணிந்திருப்பவருமானதவிமுகோ - 'த்விமுகர்' எனப்படும் இரு திருமுகங்களை உடையக'ணேச: - கணபதியானவர்ஸதா - எப்போதும்மே - எனக்குபூத்யை - செல்வத்தை அளிக்கும் பொருட்டுஅஸ்து - விளங்கட்டும்.ஒடித்த தந்தம்: துாய்மையையும் மனஉறுதியையும் கொண்டு செயல்களை நிறைவேற்றுவதைக் காட்டுவது.பாசம்: உயிரின் மூவகைப் பாசங்களை அகற்றுவதைக் குறிப்பது பாசம்.அங்குசம்: புலனடக்கத்தையும் ஆணவ மலத்தை நீக்குவதையும் குறிப்பது அங்குசம்.ரத்தின பாத்திரம்: அனைத்து செல்வங்களையும் தருபவர் என்பதை உணர்த்துகிறது.பலன்: வறுமை நீங்கும்; செல்வம் பெருகும்; போகம், மோட்சம் இரண்டும் கிட்டும்.அருள் தொடரும்...வியாகரண சிரோமணி வி.சோமசேகர குருக்கள்