உள்ளூர் செய்திகள்

யாருக்கு உதவி

திருப்பூரைச் சேர்ந்த பக்தர் ஒருவர் காஞ்சி மடத்திற்கு வந்தார். சுவாமிகளின் முன் தான் கொண்டு வந்த அட்டைப் பெட்டியில் இருந்து பனியன்களை எடுத்தார். அதை பார்த்த சுவாமிகள் புன்னகைத்தபடி, 'ஆசையோடு கொண்டு வந்திருக்கேள். சின்னப் பசங்க போடற பனியனா இருக்கே...' என்றார்.'யாருக்குக் கொடுக்கணும்னு பெரியவா நினைக்கிறீங்களோ அப்படியே செய்யுங்க' என்றார் பக்தர்.'வேத பாடசாலையில் படிக்கும் பசங்களுக்குத் தோதான சைஸ் பனியன் இது. ஆனால் இதை அவாளுக்கு கொடுக்கக் கூடாது. அப்படி கொடுத்தோம்னா எப்பவும் அதைப் போட்டுண்டே பாடசாலையில சுத்துவா. சுவாமி தரிசனத்துக்குப் போறப்பவும் அதோடயே வந்துடுவா... அவாளுக்குத் தெரியாது. இது நம்ம தர்மத்துக்கு விரோதம்... நாமதான் புத்தியா நடந்துக்கணும்' என்றார் மஹாபெரியவர்.மேலும் சுவாமிகள், 'நீ ஒரு காரியம் பண்ணு... இந்த பனியனை அடுத்த தெருவில் உள்ள ஓரியண்டல் பள்ளியின் ஏழை பசங்களுக்குக் கொடு. உன்னோட துணைக்கு மடத்திலேர்ந்து ஒருத்தரை கூட அனுப்பறேன்...' என்ற மஹாபெரியவர் ஒரு தொண்டரையும் அவருடன் அனுப்பினார். சுவாமிகளை மீண்டும் வணங்கி விட்டு பெட்டியைச் சுமந்தபடி மாணவர் விடுதியை நோக்கி நடந்தார் அந்த பக்தர். யாரிடம் எதை சேர்க்க வேண்டும் என்பதை முடிவு செய்வதில் காஞ்சி மஹாபெரியவருக்கு நிகர் யாருமில்லை.காஞ்சி மஹாபெரியவரின் உபதேசம்* ஒருமுறையாவது காசி, ராமேஸ்வரம் செல்.* புண்ணிய தீர்த்தத்தை சுத்தமாக வைத்திரு. * சனிக்கிழமையன்று நல்லெண்ணெய் தீபம் ஏற்ற ஆயுள் கூடும். * முடிந்தவரை கை, கால்களை கழுவிய பின் கோயிலுக்குள் நுழையுங்கள். உடல்நலம் பெற... காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்அஸ்மிந் பராத்மன் நநு பாத்மகல்பேத்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!அநந்த பூமா மமரோக ராஸிம்நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!! -நாராயணீயம்எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப் போக்கி நலம் தர வேண்டும்.பி.சுவாமிநாதன்swami1964@gmail.com