உள்ளூர் செய்திகள்

பகவத்கீதையும் திருக்குறளும் - 9

முன்னோர் வழிபாடுபள்ளிக்கூடம் முடிந்து வீட்டிற்கு வந்ததும் ராமசாமி தாத்தா வீட்டை நோக்கி ஓடினான் கந்தன். ''நாளையோடு எங்க தாத்தா இறந்து 30 நாளாச்சு. அதனால வீட்டில் படையல் போடுறாங்க. முன்னோருக்கு படையல் இடுவது பற்றி கிருஷ்ணரும், திருவள்ளுவரும் என்ன சொல்கிறார்கள்?'' எனக் கேட்டான். பகவத்கீதையின் முதல் அத்தியாயத்தில் 42ம் ஸ்லோகத்தில் கிருஷ்ணர், ஸங்கரோ நரகாயைவ குலக்4நாநாம் குலஸ்ய ச|பதந்தி பிதரோ ஹ்யேஷாம் லுப்தபிண்டோ ³த³கக்ரியா​: ||1-42||முன்னோர் வழிபாட்டை செய்யாவிட்டால் நல்ல குலத்தில் பிறந்தவர்களும் நரகம் செல்லும் நிலை ஏற்படும். இதனால் அவர்களின் முன்னோர்களும் பிண்டம், தண்ணீர் இன்றி அவதிப்படுவர். குருக்ஷேத்திரப் போரில் அர்ஜுனன் பங்கேற்கத் தயங்கினான். அதற்கான காரணத்தைச் சொல்லும் போது, ''கவுரவர்களை கொன்று விட்டால் அவர்களின் முன்னோருக்கு யார் பிண்டம் இடுவார்கள்? அந்த பாவம் என்னை தானே சேரும்'' என வருந்தினான். கிருஷ்ணர் காலத்திலேயே அதாவது துவாபர யுகத்திலேயே முன்னோருக்கு திதி கொடுக்கும் வழக்கம் இருந்ததை நம்மால் அறிய முடிகிறது. திருவள்ளுவர் 43வது குறளில் இது பற்றி கூறியுள்ளார். தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்குஐம்புலத்தாறு ஓம்பல் தலை.தெற்கு திசையில் வாழும் முன்னோர்கள், தேவர்கள், விருந்தினர், சுற்றத்தார், தான் என ஐந்து பேருக்கும் தர்மங்களைச் செய்வது இல்லறத்தான் கடமை என்கிறார். தென்புலத்தார் என்பது முன்னோரைக் குறிக்கும். அவர்களுக்கு வருடம் தோறும் திதி கொடுக்க வேண்டும்'' என்றார் தாத்தா. -தொடரும்எல்.ராதிகா97894 50554