உள்ளூர் செய்திகள்

பொருளாதாரத்தில் வளர்ச்சி பெற...

கும்பகோணம் அருகே உள்ள தலம் திருவாவடுதுறை.இத்தலத்தில் அம்பாள் பசு வடிவம் எடுத்து சிவபெருமானை பூஜித்ததால் திருவாவடுதுறை என பெயர் வந்தது. இங்கு தேவார மூவர்கள்(சம்பந்தர், அப்பர், சுந்தரர்) திருமாளிகை தேவர், திருமூலர், சேரமான்பெருமான், நம்பியாண்டார் நம்பிகள், சேக்கிழார், அருணகிரிநாதர், பட்டினத்தார், சிவஞான யோகிகள், மீனாட்சிசுந்தரம் பிள்ளை மற்றும் பலராலும் பாடல் பெற்ற தலம். இத்தலத்தில் இருக்கும் ஆதினத்தின் தலைமையில் தான் தற்போது புதியதாக திறக்கப்பட்ட பார்லிமென்டில் சுதந்திரச்செங்கோல் நிறுவப்பெற்றது. ஒருசமயம் சிவனடியார்களில் ஒருவரான ஞானசம்பந்த நாயனார் திருவாவடுதுறை என்னும் இத்தலத்தில் தங்கி இருந்தார். இங்கு அருள் பாலிக்கும் மாசிலாமணியீசரை அடியார்களுடன் தரிசிக்க சென்ற போது அவரது தந்தையார் உலக நலனுக்காக யாகம் நடத்திட பொன் பொருள் தேவைப்படுகிறது என சொன்னார். தன்னிடம் அருள் செல்வத்தை தவிர பொருள் செல்வம் எதுவும் இல்லையே என நினைத்த அவர் மாசிலாமணியீசரை இடரினும்... என தொடங்கும் பாடல்களை பாடி வழிபட்டார். அப்போது சிவகணம் ஒன்று தோன்றி அள்ள அள்ள குறையாத பொற்கிழி ஒன்றை கோயிலின் பலிபீடத்தில் வைத்து விபரங்களை சொல்லி மறைந்தது. ஞானசம்பந்தரும் அதை தன் தந்தையிடம் கொடுத்தார். இன்றும் இப்பதிகப்பாடல்களை நாள்தோறும் உளமார எவர் ஒருவர் படித்து வருகிறாரோ அவருக்கு பொருளாதார சிரமம் ஏற்படுவதே இல்லை. இடரினும் தளரினும் எனதுறு நோய்தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்கடல்தனில் அமுதொடு கலந்த நஞ்சைமிடறினில் அடக்கிய வேதியனேஇதுவோ எமையாளுமாறு ஈவதொன்று எமக்கில்லையேல்அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே. அலைபுனல் ஆவடுதுறை அமர்ந்த இலை நுனை வேற்படை யெம்இறையைநலமிகு ஞானசம்பந்தன் சொன்ன விலையுடை அருந்தமிழ் மாலைவல்லார் வினையாயின நீங்கிப் போய் விண்ணவர் வியனுலகம் நிலையாகமுன் ஏறுவர் நிலமிசை நிலையிலரே.