இம்மையும் மறுமையும்
UPDATED : பிப் 09, 2024 | ADDED : பிப் 09, 2024
* இம்மை என்பது நம்பிக்கையாளர்களுக்குச் சிறை போன்றது. நம்பிக்கையற்றவர்களுக்கு இதுதான் சுவர்க்கம். * இம்மையை விரும்பியவன் மறுமைக்கும், மறுமையை விரும்பியவன் இம்மைக்கும் தீங்கிழைக்கிறான். ஒன்று விரைவில் அழியக்கூடியது. மற்றொன்று என்றைக்குமே அழியாதது. அழியக்கூடியதை ஒதுக்கி விட்டு அழியாததைத் தேர்ந்தெடுங்கள். * இம்மையின் இன்பங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதுதான் எல்லாத் தீயசெயல்களுக்கும் ஆணி வேர். * அறிவில்லாதவர்கள் இம்மையில் செல்வத்தைச் சேர்க்கிறார்கள். ஞானமில்லாதவர்கள் பணத்துக்காக விரோதத்தை வளர்க்கிறார்கள். தெளிவில்லாதவர்கள் செல்வத்தைப் பார்த்து பொறாமைப்படுகிறார்கள்.