உள்ளூர் செய்திகள்

எங்கே இருக்கிறார் கடவுள்?

* உலகிலுள்ள எல்லா உயிர்கள் மீதும் கடவுள் இடைவிடாது கருணை பொழிந்து கொண்டிருக்கிறார்.* சாதிக்க முடியாததைக் கூட பக்தியின் மூலம் சாதிக்க முடியும். கடவுளிடம் மனிதன் கொண்டிருக்கும் தொடர்பே நிலையானது.* கடிகாரம் எப்போதும் இடைவிடாமல் ஓடிக் கொண்டிருப்பது போல, கடவுளின் திருநாமத்தை இடைவிடாமல் ஜெபித்துக் கொண்டே இருங்கள்.* அகந்தை கொண்ட மனிதர்கள் தாங்களே அனைத்தையும் செய்வதாக எண்ணுகின்றனர். * மனம் கீழான விஷயங்களில் மட்டும் ஈடுபாடு கொள்கிறது. இதைத் தவிர்த்தால் தான் கடவுளின் அருள் கிடைக்கும்.* மகிழ்ச்சியை மனிதன் அங்குமிங்கும் தேடி அலைகிறான். ஆனால், கடவுள் அவன் உள்ளத்தில் குடியிருப்பதை அவனால் உணர முடியவில்லை.- சாரதாதேவியார்