உள்ளூர் செய்திகள்

நன்றி மறவாதீர்கள்

* தனக்கென வாழாமல் பிறர் நலனுக்காக வாழ்பவர்களே நல்ல மனிதர்கள்.* கடவுளை நம்பினால் நமக்குத் தான் லாபமே ஒழிய, நம்மால் அவருக்கு ஆக வேண்டியது ஏதுமில்லை.* ஆன்மிகம் என்பது கடவுளைப் பற்றி வெறுமனே பேசுவதல்ல. கடவுள் சிந்தனையில் தன்னையே கரைத்துக் கொள்வதாகும்.* உங்கள் குறைகளை எடுத்துச் சொல்பவர்களிடமும் நன்றியுள்ளவர்களாக இருங்கள்.* முதலில் மனதில் நல்ல திட்டங்களைத் தீட்டுங்கள். பின்னர் அதற்கான முயற்சியில் தீவிரம் காட்டுங்கள்.- சிவானந்தர்