எண்ணம் போல் வாழ்வு
UPDATED : ஆக 03, 2015 | ADDED : ஆக 03, 2015
* எளிய வாழ்வும், உயர்ந்த எண்ணமுமே குறிக்கோளாக இருக்க வேண்டும்.* யாரையும் புண்படுத்த வேண்டாம். அனைவரிடமும் அன்பு காட்டுங்கள்.* வேலைக்காரர்களை நம்பி இருக்க வேண்டாம். உங்கள் தேவைகளை நீங்களே பூர்த்தி செய்யப் பழகுங்கள்.* தேவைகளைக் குறைத்துக் கொண்டால் வாழ்வில் திருப்தியும், சந்தோஷமும் உண்டாகும்.* பத்தில் ஒரு பங்கை தர்மத்திற்காக செலவிடுங்கள்.* எண்ணம் போலவே வாழ்வு அமைகிறது. எப்போதும் உயர்ந்ததை மட்டுமே சிந்தியுங்கள்.-சிவானந்தர்