உண்மை வழியில் நடப்போம்
UPDATED : பிப் 20, 2017 | ADDED : பிப் 20, 2017
* சுயநலம் இல்லாமல் அனைவரிடமும் அன்பு காட்டுங்கள். எந்த நிலையிலும் உண்மைக்கு மாறாக நடக்காதீர்கள்.* எளிமையாக இருப்பதில் திருப்தி கொள்ளுங்கள். உயர்ந்த குறிக்கோளுக்காக வாழ்வு நடத்துங்கள்.* உலகில் நாம் ஒரு வழிப்போக்கர் என்பதை நினைவில் கொள்ளுங்கள். விவேகமுடன் செயல்படும் மனநிலை பெறுவீர்கள்.* செய்த தவறுகளைச் சிந்தித்துப் பாருங்கள். உங்களை நீங்களே திருத்திக் கொள்ள முயலுங்கள்.- சிவானந்தர்