தலைநிமிர்ந்து வாழலாம்
UPDATED : ஏப் 01, 2015 | ADDED : ஏப் 01, 2015
* மனதை அடக்க நினைத்தால் அலையும். அறிய நினைத்தால் தானாக அடங்கும்.* எண்ணத்தில் ஒழுங்கு இருந்தால் எண்ணியதெல்லாம் நடக்கும்.* வாங்கும் கடனும், தேங்கும் பணமும் ஒருவரிடமே வளரக் கூடாது. இல்லாவிட்டால் மனநிம்மதி குறையும்.* உடையில் ஒழுக்கம், உள்ளத்தில் கருணை, நடையில் கண்ணியம்.. இதுவே நல்லோரின் இலக்கணம்.* உழைப்பால் மனிதன் தலைநிமிர்ந்து வாழலாம். மற்றவர்களையும் வாழ வைக்கலாம்.-வேதாத்ரி மகரிஷி