உள்ளூர் செய்திகள்

இல்லறம்

உமரை (ரலி) சந்திக்க வந்த ஒரு பெண், ''அமீருல் முஃமினீன் அவர்களே! எனது கணவர் பகல் முழுவதும் நோன்பு நோற்கிறார். இரவு முழுவதும் தொழுகை செய்கிறார். அவர் மீது குற்றம் சொல்ல விரும்பவில்லை. இறைவழிபாட்டில் அல்லவா அவர் மூழ்கியிருக்கிறார்'' என்றார். அதற்கு, ''நல்லது தானேம்மா'' என சொன்னார். அப்பெண் மீண்டும் அதே வார்த்தைகளை திரும்பக் கூறினார். உமருக்கு ஒன்றும் புரியவில்லை. இதை அருகில் இருந்து கவனித்துக் கொண்டிருந்த கஅபுல் அஸ்தி என்பவர் உமரிடம், ''அந்தப் பெண் தன் கணவரை குறித்து புகார் சொல்கிறாள். அதாவது அவர்கள் இன்னும் இல்லறத்தில் ஈடுபடவில்லை என மறைமுகமாக கூறுகிறாள்'' என்றார். உடனே உமர் அவளது கணவரை அங்கு வரவழைத்து, ''உங்களது கடமையை சரிவர நிறைவேற்றுங்கள். மனைவி மீது உங்களுக்கு உரிமையுண்டு. வணக்கத்தில் ஈடுபடுவதை போல் இல்லறத்திலும் ஈடுபடுங்கள்'' என அறிவுரை கூறினார்.