உள்ளூர் செய்திகள்

எங்கே நிம்மதி

நஸீர் மனச்சோர்வுடன் கடற்கரையில் அமர்ந்திருந்தான். அப்போது அவ்வழியாக வந்த பெரியவர் , ''தம்பி... சோகமாக இருக்கிறாயே... ஏன்'' எனக் கேட்டார். ''கைநிறைய சம்பாதிக்கிறேன். ஆனால் என் மனைவி இன்னும் பணம் வேண்டும் என கேட்கிறாள். குழந்தைகளும் நான் சொல்வதைக் கேட்பதில்லை. நிம்மதியே இல்லை'' என புலம்பினான். உடனே நஸீரின் கையில் இருந்த அலைபேசியை எடுத்துக் கொண்டு ஓடினார் பெரியவர். சற்றும் எதிர்பார்க்காத அவன் பின்தொடர்ந்து ஓடினான். ''யோவ்... பேசிக்கிட்டு இருக்கும் போதே இப்படி செஞ்சுட்டா.. இரு. உன்னை போலீஸ்ல சொல்றேன்'' என்றான். ''உண்மையை புரிய வைக்கத்தான் இப்படி செஞ்சேன். ரிட்டையர்டு ஆன போலீஸ்தான் நான்'' என்றார். ''நீங்க சொல்றது புரியலை'' என கோபப்பட்டான். ''அலைபேசி போச்சேன்னு வருத்தப்பட்ட. கிடச்சதும் சந்தோஷப்பட்ட. நிம்மதிங்கிறது மனசில தான் இருக்கு. பிரச்னையை நினச்சு வருந்தாத. அது தானாகவே சரியாகும்'' என ஆறுதல் சொன்னார் பெரியவர்.