உள்ளூர் செய்திகள்

உயிரே போனாலும்...

ஒருமுறை எதிரிகளிடம் மாட்டிக் கொண்டார் தோழர் குபைப். அவரைக் கழுவில் ஏற்றி கொல்ல முடிவு செய்தனர். அதற்காக கழுமரத்திற்கு கொண்டு செல்லும் முன், ''நான் சொல்வதை திரும்பச் சொல். இப்போதே உயிர்ப்பிச்சை கிடைக்கும்'' என்றனர். அமைதியாக இருந்தார் குபைப். அப்போது, ''இந்த கழுமரத்தில் எனக்கு பதிலாக நாயகம் இருப்பதை நான் விரும்புகிறேன் எனச் சொல். உன்னை விடுவிக்கிறோம்'' என்றனர். ''என் உயிரே போனாலும் சொல்ல முடியாது'' என்றார் குபைப்.