உள்ளூர் செய்திகள்

தாகம் தணியட்டும்

ஈராக்கில் பிறந்தவர் இப்ராஹிம் நபி. இவரது மனைவி ஹாஜிரா, மகன் இஸ்மாயிலுடன் மெக்கா நகருக்கு புறப்பட்டார். ஈராக்கில் இருந்து சிரியா, பாலஸ்தீனம், எகிப்து, மெக்கா என 3000 கி.மீ., பயணித்தார். அவரது விடாமுயற்சிக்கு இறையச்சமே காரணம். அன்றைய மெக்கா நகரம் மலைகளால் சூழப்பட்டு வறண்ட பள்ளத்தாக்காக இருந்தது. இப்படிப்பட்ட பகுதியில் இறைவனின் விருப்பப்படி மனைவி, குழந்தையை தனியே விட்டு விட்டு இப்ராஹிம் புறப்பட்டார். அவரின் மனைவி ஹாஜிரா, ''எங்களை தனியாக விட்டுச் செல்வது இறைகட்டளை என்றால், நிச்சயம் அவன் எங்களை காப்பான்'' என்ற நம்பிக்கையுடன் கணவரை அனுப்பி வைத்தார். பிறகு குழந்தையுடன் குன்றுக்குள் சென்று தங்கினார். இப்படியாக நாட்கள் கடந்தது. திடீரென குடிக்கும் தண்ணீர் இல்லை. தாகத்தால் குழந்தை அழுததால் அதை கீழே கிடத்திவிட்டு, யாராவது உதவிக்கு வருவார்களா என ஓடினார் ஹாஜிரா. அந்த சமயத்தில் குழந்தை கால்களை உதைத்த இடத்தில் இருந்து இறையருளால் நீருற்று பொங்கியது. அதைக் கண்ட ஹாஜிரா, 'ஜம் ஜம்' எனக் கூறினார். இதற்கு 'தாகம் தணியட்டும்' என பொருள். இந்த நீரூற்றில் இருந்தே (கிணறு) இன்றைக்கும் புனிதநீர் எடுக்கப்படுகிறது.