உள்ளூர் செய்திகள்

எதிர்பார்ப்பு நிறைவேறியது

விதி என்றால் என்ன என முல்லாவிடம் கேட்டார் ஒரு பணக்காரர். அதற்கு அவர், ''அதை விளக்க வேண்டுமானால் எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும்'' என்றார் முல்லா. ''சொல்லுங்கள்... செய்கிறேன்'' என்றார் பணக்காரர். ''நுாறு பொற்காசு எனக்கு தேவை. கொடுங்கள்'' என்றார் முல்லா. ''திடீரெனக் கேட்டால் எப்படி தருவது... இப்போதைக்கு பத்து காசு தருகிறேன்'' என்றார். ''பார்த்தீரா... உங்களால் இப்போது என் எதிர்பார்ப்பு நிறைவேறியது. கிடைக்க வேண்டியது எனக்கு கிடைத்தே தீரும். இதையே விதி என்கிறோம்'' என்றார் முல்லா.