உள்ளூர் செய்திகள்

அன்புக்குரியவனே...

ஒருநாள் நபி ஸெய்யதுனா ஈஸா நடந்து செல்லும் போது திடீரென மழை கொட்டியது. ஒதுங்க இடம் தேடிய போது குடிசை ஒன்றைக் கண்டார். வாசலில் ஒரு பெண் இருந்ததால் வேறிடம் தேடிச் சென்றார். குகை ஒன்று தென்பட்டது. அதற்குள் சென்ற போது சிங்கம் ஒன்று கர்ஜித்தபடி இருந்தது. அப்போது, ''இறைவா! உன் படைப்பு ஒவ்வொன்றுக்கும் நீயே ஒதுங்க இடம் கொடுத்துள்ளாய். ஆனால் எனக்கு ஒதுங்க இடமே இல்லையே'' என வருந்தினார். ''அன்புக்குரியவனே... ஒதுங்க உனக்கா இடமில்லை? என் அன்பு நிழலில் எப்போதும் ஒதுங்கலாம். இந்த பிறவியில் உன் ஆயுளை விட மறுமையில் நீண்ட காலம் வாழ்வாய்'' என்றான். அப்போது அவரது கண்முன்னே அழகிய மாளிகை காட்சியளித்தது. ''இந்த மாளிகை வேண்டுமானாலும் இப்போதே உனக்கு கிடைக்கும். ஆனால் உனக்கு அளித்துள்ள நபித்துவம்(பதவி) இதை விட பல மடங்கு உயர்வானது'' என மழையில் நனைந்தபடி நின்ற ஈஸாவிடம் தெரிவித்தான்.