பிறர் போற்ற வாழ்
UPDATED : பிப் 19, 2023 | ADDED : பிப் 19, 2023
ஒரு ஊரில் சுவையான பழம் இருப்பதாகவும், அதை சாப்பிட்டால் நீண்டநாளுக்கு பசியே எடுக்காது என பெரியவர் ஒருவருக்கு தகவல் கொடுத்தனர் சிலர். அப்பழங்கள் கிடைத்தால் நம்மூர் மக்களும் பயன் பெறுவார்களே என்ற நல்லெண்ணத்தில் அங்கு சென்றார் பெரியவர். பலரிடம் கேட்க சரியான பதிலை தர மறுத்து விட்டனர். ஒரு சிறுவன் மட்டும் வீட்டில் உள்ள பழத்தை அவரிடம் தந்தான். இங்கு நிறைய கிடைக்கும் என சொன்னார்களே என்றார் பெரியவர். உண்மைதான். இந்த ஊரில் உள்ளவர்கள் சுயநலவாதிகள். பயிர் செய்யும் முறையை ரகசியமாக வைத்துள்ளனர் என சொன்னான் சிறுவன். உன்னைபோல் எல்லோரும் இருந்தால் ஒவ்வொரு ஊரும் வளம் பெறும் என வாழ்த்தினார் பெரியவர்.