தன்வினை தன்னைச்சுடும்
UPDATED : டிச 11, 2022 | ADDED : டிச 11, 2022
ஒருவரின் வீட்டின் தொலைபேசி கட்டணம் அதிகமாக வந்தது. அவரோ! 'நான் நம்ம வீட்டு தொலைபேசியை அதிகமாக உபயோகபடுத்துவதில்லையே' என யோசித்தபடி மனைவி, மகனிடம் கேட்டார். அலுவலக தொலைபேசியை மட்டுமே உபயோகிக்கிறோம். எங்களுக்கு எதுவும் தெரியாது என்றனர். எப்படி இவ்வளவு கட்டணம் வருகிறது என குழம்பினார். தொலைபேசி நிறுவனத்திடம் இது சம்பந்தமாக கேட்ட போது, பில் தொகை சரியானதே என தெரிவித்தனர். அதுவரை அமைதியாக இருந்த அந்த வீட்டின் வேலைக்காரர், ''உங்களை போல நானும் என்னோட அலுவலக தொலைபேசியை மட்டுமே உபயோகித்தேன். அது தப்புங்களாய்யா'' என அப்பாவியாக கேட்டான். பல நேரங்களில் நாம் செய்யும் தவறு நமக்கு புரிவதில்லை, வேறொருவர் நமக்கு அதை செய்யும் வரை.