உள்ளூர் செய்திகள்

அப்பாவின் ஆசை

ஸஃஅத் இப்னு அபிவக்காஸ் என்பவர் உடல்நலமில்லாமல் இருந்தபோது நபிகள் நாயகம் அவரை பார்க்க சென்றார். அப்போது இப்னு, ''என்னிடம் சொத்து நிறையவே உள்ளது. எனவே நான் நன்றாக இருக்கும்போதே தர்மம் செய்ய விரும்புகிறேன். எனக்கு ஒரு மகள் மட்டுமே இருக்கிறாள். சொத்தில் மூன்றில் இருபாகத்தை தர்மமாக கொடுத்து விடலாம் என நினைக்கிறேன்'' என சொன்னார். அதற்கு அவர் ''வேண்டாம்'' என்றதற்கு, ''சரி. பாதியைக் கொடுக்கவா?'' எனக்கேட்டார் இப்னு. அதற்கும் வேண்டாம் என சொன்னார். கடைசியாக 'மூன்றில் ஒரு பாகத்தை தருகிறேன்' என கூறினார். இதைக்கேட்ட நாயகம், ''சரி. மூன்றில் ஒரு பங்கை கொடுங்கள். இருந்தாலும் அதுவும் அதிகமானது என்று கருதுகிறேன். தர்மம் செய்வது சிறந்த செயல் என்றாலும், உங்களது குழந்தைகளை பிறரிடம் கை ஏந்தும் நிலைக்கு தள்ளிவிட்டு விடாதீர்கள். அவர்களிடம் குறிப்பிட்ட அளவாவது செல்வம் இருக்கும்படி விட்டுச்செல்லுங்கள். இதுதான் சிறந்த செயல்'' என்றார்.