உள்ளூர் செய்திகள்

சொல்லாமலே தெரியுதா...

காட்டிலுள்ள எல்லா விலங்குகளும் ஒன்று கூடின. ஒரே சமயத்தில் அனைவரும் சிங்கத்தை தாக்கி நமது பலத்தினை அதனிடம் நிரூபிக்க வேண்டும் என்பது தான். இதற்கு காரணம் அதுமட்டும் தான் ராஜாவா இருக்கணுமா நாமெல்லாம் இருக்க கூடாதா என்ற குறுகிய எண்ணம் எல்லோருடைய மனதிலும் ஓடியது.எதிரே வந்த சிங்கத்திடம் ஒவ்வொரு விலங்குகளும் அதன் பலத்தை காட்டி செமத்தையாக வாங்கி கட்டிக் கொண்டது. மறுநாள் கம்பீரமாக நடந்து வந்த சிங்கம் அதனுடைய கண்களால் அனைவருக்கும் ஒன்றை சொல்லாமல் சொல்லியது. ''எனது பலத்தால் மட்டும் நான் இந்த காட்டிற்கு ராஜாவாகவில்லை. எந்த நேரத்திலும், எந்த சூழலையும் சமாளிக்கும் ஆற்றல் என்னிடம் உண்டு. அதனால் தான் நான் காட்டிற்கு ராஜா'' என்ற தோரணையில் அது நடந்து சென்றது.