உருவத்தை கண்டு எடை போடாதீர்
UPDATED : ஜன 12, 2023 | ADDED : ஜன 12, 2023
மரத்தின் உச்சியில் இருந்த தேன்கூட்டைப் பார்த்த கரடிக்கு சாப்பிட வேண்டும் என ஆசை ஏற்பட்டது. தேனீக்கள் என்ன செய்து விடும் என்ற மமதையில் மரத்தின் மீது ஏறியது. அங்கிருந்த தேனீக்களைப் பார்த்து தேனை சாப்பிட போகிறேன் என சொன்னது. இதைக்கேட்ட தேனீக்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து கரடியை விரட்டியது. தாக்குப் பிடிக்க முடியாத கரடி காட்டிற்குள்ளே ஓடியது. முடிவில் ஆற்றின் நடுவே குதித்தது. கரடியை மன்னித்த தேனீக்கள் தனது கூட்டை நோக்கி பறந்தது.