நீந்தத் தெரியுமா
முல்லாவிற்கு எல்லா தொழில்களும் கைவந்த கலை. அவர் செய்யாத தொழில்களே இல்லை. அவரிடம் ஒரு பழைய படகு இருந்தது. அதைக்கொண்டு அக்கரைக்கு மக்களை கொண்டு செல்லும் பணியை செய்து கொண்டிருந்தார். ஒருநாள் வெளியூரிலிருந்து வந்த அறிஞர்கள் அவருடைய படகில் ஏறினர். மறுகரைக்கு செல்ல அவரும் படகினை செலுத்தினர். அவர்கள் மூவரும் பேசிக்கொண்டே வந்தனர். வாழ்நாளில் கால்வாசி, அரைவாசி, முக்கால்வாசியை வீணாக்கி விட்டீர்களே என ஒருவருக்கு ஒருவர் கூறிக்கொண்டனர். இதையெல்லாம் அமைதியாக கேட்டுக் கொண்டு இருந்தார் முல்லா. ஆற்றின் நடுவே செல்லும் போது படகிலிருந்த சிறிய துவாரம் வழியே தண்ணீர் வர ஆரம்பித்தது. அதைக்கண்டு அச்சமடைய ஆரம்பித்த முல்லா '' அறிஞர்களே! உங்களுக்கு நீந்தத்தெரியுமா'' எனக்கேட்டார். அவர்களும் தெரியாது என்றனர். அவர்களிடம் விபரத்தை கூறிய முல்லா ஆற்றில் குதித்து நீந்தி கரையை அடைந்தார். அறிஞர்களும் ஆற்றில் மிதந்து வந்த பெரிய மரக்கொம்பை பிடித்தவாறு தப்பிப் பிழைத்தனர்.வாழ்க்கைக்கல்வியும் நமக்கு தேவை என்பதை உணர்ந்தனர்.