பெரியவர்களிடம் மோதாதே..
UPDATED : ஜன 31, 2023 | ADDED : ஜன 31, 2023
காட்டில் வசித்த ஞானி ஒருவர் விலங்குகளிடம் அன்பாக இருந்தார். ஒருநாள் ஓநாய் ஒன்றை யானை துரத்த அது ஞானியிடம் தஞ்சம் புகுந்தது. அவர் அதை யானையாக மாற்றினார். மற்றொரு நாள் அந்த யானையை ஒரு சிங்கம் துரத்தியது. யானையும் அவரிடம் செல்ல அதை சிங்கமாக மாற்றி அனுப்பினார். அந்த சிங்கமோ எதுவாக வேண்டுமானாலும் மாற்றும் சக்தி இவரிடம் உள்ளது. நமக்கு எதிராக மற்றொரு சிங்கத்தை உருவாக்கினால்... என விபரீதமாக நினைத்தவுடனே அவரை கொல்ல முயன்றது. உடனே அதை ஓநாயாக மாற்றினார் ஞானி. பெரியவர்களிடம் மோதக்கூடாது என்பதை தெரிந்து கொண்ட ஓநாய் காட்டிற்குள் ஓடியது.