உள்ளூர் செய்திகள்

அவனே சாட்சி

வெளிநாடு செல்ல இருந்த தோழர் ஒருவர் குடும்ப செலவிற்காக நெருங்கிய நண்பர் ஒருவரிடம் சிறிது பொற்காசுகளை கடனாக கேட்டார். உமக்கு தருகிறேன். யாராவது சாட்சி சொல்ல வேண்டும் என்றார் நண்பர். அதற்கு அவரோ இறைவனே சாட்சி என்றார். குறிப்பிட்ட நாட்களுக்குள் பொற்காசுகளை தர வேண்டும் என ஒப்பந்தம் செய்தார். குடும்பத்தாரிடம் அதைக் கொடுத்து விட்டு வியாபாரத்திற்கு வெளிநாடு சென்றார்.குறிப்பிட்ட நாள் முடியும் போது நண்பரிடம் வாங்கிய பொற்காசு நினைவுக்கு வந்தது. ''இறைவனே உம்மை சாட்சியாக வைத்தே பெற்றேன். இப்போது நான் அங்கு செல்ல தாமதம் ஏற்படுகிறது ஆதலால் அவருக்குரிய பொற்காசு, அதோடு கடிதத்தையும் மரத்தில் வைத்துள்ளேன். நீயே ஒப்படைத்து விடு'' என கடலில் விட்டார். அந்த மரம் அவரது வீட்டின் அருகே கரை ஒதுங்கியது. விறகிற்கு பயன்படுத்தலாம் என மரத்தை எடுத்த நண்பருக்கு ஆச்சரியம். அதில் தனக்கான பொற்காசுகளும் தோழரின் கடிதமும் இருந்தது. இறைவனின் கருணையை எண்ணி வியந்தார்.