பதவிக்கு ஆசைப்பட்டால்...
வயதான சிங்கத்திற்கு முன்பு போல வேட்டையாட முடியாத நிலை. உணவிற்கு என்ன செய்யலாம் என யோசித்தது. எதிரே வந்த நரியிடம் இனி மேல் நீ தான் எனக்கு மந்திரி. என்னை கவனிப்பது உன் வேலை. இப்போது பசிக்கிறது. ஏதாவது கொண்டு வா என கட்டளை இட்டது சிங்கம். மறுத்து பேச முடியாத நரியோ உணவைத்தேடிச் சென்றது. எதிரே வந்த கழுதையிடம் உன்னை ஆலோசகராக நியமிக்க சிங்கம் முடிவு செய்துள்ளது என சொன்னவுடன் சிங்கத்தை பார்க்க சென்றது. பக்கத்தில் வந்த கழுதையின் தலையில் ஒங்கி அடித்துக் கொன்றது சிங்கம். குளித்த பிறகு சாப்பிட்டால் கழுதைக்கறி நன்றாக இருக்கும் என சொன்னது நரி. ஆற்றிற்கு போன சிங்கம் வருவதற்குள் அதன் மூளையை தின்றது நரி. கழுதையின் மூளையை காணவில்லையே என சிங்கம் கேட்க அதற்கு மூளை இருந்தால் என்னோடு வந்திருக்காது என சொன்னது. ஆம், நரி சொல்வது சரிதான் போல என நினைத்துக் கொண்டே கழுதையை தின்பதற்கு தயாரானது சிங்கம்.