அற்புத ஆற்றல்
UPDATED : ஜன 12, 2023 | ADDED : ஜன 12, 2023
முல்லா மீது மன்னர் வைத்திருந்த நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என நினைத்தனர் நண்பர்கள். ''யார் மனதில் என்ன நினைக்கின்றார்களோ அதை அப்படியே சொல்லி விடும் ஆற்றல் முல்லாவிடம் உள்ளது'' என மன்னரிடம் சொன்னார்கள். அவரைப்பற்றி நன்கு தெரிந்த மன்னர் ''இப்போது உமது நண்பர் என்ன நினைக்கிறார்கள் என சொல்லுங்கள்'' என முல்லாவிடம் கேட்டார். திருதிருவென முழித்த நண்பர்களின் நிலையறிந்த முல்லா ''தங்கள் ஆட்சியில் மக்கள் நிம்மதியாக இருக்கின்றனர். தங்களின் புகழ் உலககெங்கும் பரவியுள்ளது என நினைக்கிறார்கள்'' என்றார் முல்லா. உயர்ந்த மனமுடைய தாங்கள் எங்கே, பொறாமை கொண்ட நாங்கள் எங்கே என்றவாறு தவறை உணர்ந்த நண்பர்கள் முல்லாவிடம் மன்னிப்பு கேட்டனர்.