உள்ளூர் செய்திகள்

அரிய சாதனை

முல்லாவின் திறமையை பாராட்டி மன்னர் தரப்போகும் பரிசு வீண் வேலை என கருதினர் பொறாமை கொண்ட சிலர். ''முல்லா ஒரு கோமாளி தானே! பரிசு வழங்கும் அளவிற்கு வித்தியாசமான சாதனை ஒன்றும் செய்ய வில்லையே'' என அவர் காதில் விழும்படியாகவே பேசினர். உடனே கீழே குனிந்து அவர் ஆடு, மாடு நடப்பது போல தரையில் நடந்து சபைக்குள் வந்தார். மன்னர் சிரித்துக்கொண்டே, ''ஏன் இப்படி செய்தீர்கள். உமக்கு என்ன பைத்தியம் பிடித்து விட்டதா'' எனக் கேட்டார். எழுந்த முல்லா, மன்னரை வணங்கியவாறு ''நான் சாதனை ஒன்றும் நிகழ்த்த வில்லை என்றும், தாங்கள் எனக்கு வழங்கும் பரிசு, பாராட்டினை எனது நண்பர்களான அமைச்சர்கள் யாரும் விரும்பவில்லை. அதனால் தான் அவர்கள் கூறியது போல வித்தியாசமான செயலை செய்து அதைப் பெறலாம்''என நினைத்தேன் என்றார் முல்லா. பொறாமைக்காரர்கள் வெட்கப்பட்டனர். அவரின் திறமையை கண்ட மன்னர் அதிகமான பரிசுகளை வழங்கினார்.