உள்ளூர் செய்திகள்

அப்பாற்பட்ட விஷயம்

செல்வந்தர் ஒருவர், ''விதி என்றால் என்ன? உங்களுக்கு தெரியுமா'' என முல்லாவிடம் கேட்டார். அதற்கு அவர், ''எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டுமே'' எனக்கேட்டார். ''சொல்லுங்கள். நிச்சயம் செய்கிறேன்'' என கூறினார். ''இரண்டாயிரம் பொற்காசுகள் வேண்டும். அவசரமாக தேவைப்படுகிறது'' என உதவி கேட்டார் முல்லா. ''திடீரெனக் கேட்டால் எப்படி. தற்போது ஐநுாறு பொற்காசுகள் வேண்டுமானால் தருகிறேன்'' என்றார். ''பார்த்தீர்களா... நான் எதிர்பார்த்தது ஒன்று. தற்போது நடப்பது வேறு ஒன்றாக உள்ளது. இப்படி நமக்கு அப்பாற்பட்ட விஷயம் நடப்பதையே விதி என்கிறோம்'' என விளக்கம் அளித்தார்.