ரகசியம் ரகசியமானது
UPDATED : ஜன 19, 2023 | ADDED : ஜன 19, 2023
சுறுசுறுப்பாக இருப்பவர் முல்லா. எந்த வேலையையும் சாமர்த்தியமாக செயல்படுத்துவார். தொழில் ரகசியத்தையும் பாதுகாப்பவர். அதனால் எல்லோரிடமும் மதிப்பும் மரியாதையும் இருந்தது. 'உமக்கு மட்டும் இது எப்படி சாத்தியம்' என பல முறை நண்பர்கள் கேட்டனர். அதற்கு அவரோ அது 'பரம ரகசியம்' என சொன்னார். விடாமல் அவர்கள் கேட்கவே அதை சொன்னால் ரகசியத்தை காப்பாற்றுபவன் என்ற பெயர் என்னை விட்டு போய் விடும் என சொல்லி விட்டு நகர்ந்தார் முல்லா.